Wednesday, February 13, 2013

நுனிப்புல் மேயாதீங்க!

நுனிப்புல் மேயாதீங்க!
இந்த வாரம் நீயா நானா? பார்த்த பொழுது, அட நாம ரொம்ப நாளா நுனிப்புல்லா அசப்போட்டுட்டு இருந்த கருத்தா இருக்கே என எண்னினேன்
எதெற்கெடுத்தாலும் பள்ளிகளை குறை சொல்லுவது என ஆகி போன இச்சூழலில், பள்ளிகளை யாரும் குறை சொல்லாதது மகிழ்ச்சி.
ஆரம்ப கல்வி, மாணவர்களுக்கு, அடிப்படை திறன்களான கேட்டல், பேசுதல், எழுதுதல், ஆகிய திறன்களைத்தான், வளர்க்க முடியும்,(கல்வி என்பதே இயற்கைக்கு எதிரான செயல் என்பாதால், மாணவர்களை கற்றலில் ஈடுபட வைக்கவே பல்வேறு உத்திகளை கையாள வேண்டியுள்ளது) 
6 ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை மாணவனுக்கு, யோசித்தல், ஊகித்தல், ஒன்றுடன் ஒப்பிட்டு நோக்குதல், உற்று நோக்குதல்,போன்ற திறன்களின் ஆரம்ப கட்ட திறன்களை வளர்த்தெடுக்கும் வகையில் கல்வி அமைக்கப்பட்டுள்ளது, 9,10 வகுப்புகளில் அதன் தொடர்ச்சியாக, அதை வெளிப்படுத்தும் வண்ணமாக கல்வி கற்பிகப்படுகிறது, இந்த வகுப்புகளில் மாணவன் இத்திறன்களை பெற வேண்டுமானால் அவன் அடிப்படைக்கல்வியை ஓரளவாவது பெற்றிருக்கவேண்டும். இதற்கு, மாணவனுக்கு கிடைக்கும் உணவு, சமூகச்சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை போன்ற காரணிகளும் காரணமாகின்றன. மாணவனின் 11, 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் ஒரே எண்ணம், நல்ல MARK வாங்க வேண்டும், ஏதேனும் ஒரு Professional ( ENGINEERING MEDICAL AERO NAUTICAL ENGINEERING ) படிப்பு படிக்கவேண்டும் ஒரு நல்ல வேலையில், நல்ல சம்பளத்தில், வேலைக்குச்சேரவேண்டும், அவ்வளவே, 
பள்ளிகளில் சமூக அக்கறை உள்ள மாணவர்களையோ, சமூக புரிதலையோ உருவாக்குவது கடினம், இயலாதது. கல்லூரிகள் எண்ணினால் மட்டுமே சமூகத்தையும் கற்பித்து அனுப்பமுடியும். இப்பொழுது Technically skilled மனிதர்களைத்தான் மட்டுமே கல்லூரிகள் உருவாக்குகின்றன
இந்த சமூகத்தைப்பற்றிய படிப்பு எங்கும் வழங்கப்படுவதில்லை, காரணம் அதை படித்தால் யாரும் வேலை தரப்போவதில்லை, நல்ல சம்பளமும் தர போவதில்லை, கீழ் வகுப்புகளில் பெற்ற திறன்கள், 
இப்பொழுது Technically skilled மனிதர்களைத்தான் கல்லூரிகள் உருவாக்குகின்றன.
அவர்களை நல்ல Techically skilled person களாக வளர்கிறார்கள், அவர்களுக்கு பயன்தருகிற, அவர்கள் பணி சார்ந்த, படிப்பு சார்ந்த விஸயங்களில் அவர்கள் மேலோட்டமாக இல்லை, ஒவ்வொன்றையும் ஆழமாகவும், தெளிவாகவும் தான்,படிக்கிறார்கள் 
சமூகத்தப்படிப்பதும் ஒரு விஞ்ஞானம் தான் என்பது நமக்கு கற்றுக்கொடுக்கப்படவில்லை, இதுவும் மறியாதைக்குறிய படிப்பு எனும் எண்ணம் நம் மக்களின் மனதில் ஏற்றாத வரை மாணவர்கள் சமூகத்தை மேலோட்டாமாகத்தான் பார்ப்பார்கள், சமூகத்தை, சமூக மாற்றத்தை இவ்வளவு மேலோட்டமாக பார்க்கிறார்களே, என நாம் ஆதங்கப்படுகிறோம்,. எனவே, சமூகத்தை படிப்பதற்கான வாய்ப்பை எப்படியேனும் எல்லா வகை கல்லூரிகளும் செய்ய வேண்டும், தனக்காக வாழ சுயநல மனிதர்களை மட்டும் உருவாகினால் எதிர்காலம் மிகக்கொடுமையான ஒன்றாக மாறிவிடும், சமூகத்தை கற்காதா மனிதன் மிக எளிதாக சக மனிதனால், ஒரு கூட்டத்தால், ஆள்வோரால், வேறு நாட்டினரால், என யாராலும் எமாறப்படலாம். விழித்துக்கொள்வோம்.
Professional படிப்புகளை, தான் வாழ பயன் படுத்திக்கொள்ளலாம், சமூகம் வாழ வேண்டுமானால், சமூகத்தை ஆழமாகவும், தெளிவாகவும் பார்கிறவர்களின் எண்ணிக்கை, மற்ற படிப்பு படிகிறவர்களுக்கு சமமாக இருக்க வேண்டும், 
அதற்கு ஒன்று,சமூகம் சார்ந்த படிப்புகளில் அதிக மாணவர்கள் சேர வேண்டும் அல்லது படிக்கும் படிப்புடன் சமூகம் சார்ந்த படிப்பையும் சேர்ந்து கற்பிக்க வேண்டும்.
இல்லையேல் ஆளும் முதலாளித்துவ பேரழிவு ஆட்சியாளர்கள், நம்மை கொன்று குவிக்கவும், தயங்க மாட்டார்கள். 
எனவே சமூகதைப்பற்றி நுனிப்புல் மேயாதீர்கள்,
நீயா நானா கூட அதைத்தான் செய்கிறது.
#

by fb... https://www.facebook.com/balasubramanian.rathinasamy 

Monday, February 4, 2013

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் விதிமுறை மீறல் தொடர்கிறது...!மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டுக்கான பாடங்களை இப்போதே நடத்த துவங்கியுள்ளனர். விதிமுறைகளை மீறும் தனியார் பள்ளிகளை கண்டு கொள்ளாத அரசின் போக்கு, பெற்றோரையும், கல்வியாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வை மட்டுமே, மிக முக்கியமாக கொண்டு செயல்படுகிறது. ஏனெனில், அதில் கிடைக்கும் அதிகபட்ச தேர்ச்சியையும், மதிப்பெண்களையும் விளம்பரப்படுத்தியே,
அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் கட்டணத்தை நிர்ணயிக்கின்றன. இதனால், பொதுத் தேர்வில் ஒவ்வொரு மாணவனையும், அதிகபட்ச மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்ற முனைப்புடனே, பெரும்பாலான தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சியும், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையையும் மட்டுமே, லட்சியமாக கொண்டு இயங்குகின்றன. இதில், அதிக மதிப்பெண் எடுக்க இயலாத சராசரி மாணவர்களுக்கு, "கல்தா' கொடுக்கவும் சில பள்ளிகள் தயங்குவது இல்லை.

இதற்காக, அரசு விதிமுறைகளைகாற்றில் பறக்கவிடுவதோடு, பலவித குறுக்கு வழிகளையும் நாடுகின்றன. ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாடங்களை, ஒரு சில மாதங்களில் முடித்துவிட்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பாடங்கள் நடத்துவதை, பல மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கமாக கொண்டுள்ளன.ஒன்றரை ஆண்டுக்கு, ஒரே பாடத்தை திரும்ப திரும்ப நடத்தியும், அதில், தொடர்ந்து மாதிரி தேர்வு நடத்தியும், மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்க முயற்சிக்கின்றன.பொங்கல் விடுமுறைக்குப் பின், பெரும்பாலான பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, பத்தாம் வகுப்பு பாடமும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடமும் நடத்த துவங்கிவிட்டனர். இதனால், கல்வியாண்டின் நடுவில், அந்த பாடப் புத்தகங்களை வாங்கிவர வற்புறுத்துகின்றன. வேறு எங்கும் பாடப் புத்தகங்கள் கிடைக்காததால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அவதிக்கு உள்ளாகின்றனர்.
தேர்வின் போது மட்டும், ஒன்பதாம் வகுப்பு பாடங்களை படிக்க வேண்டியிருக்கும் என்பதால், கூடுதல் குழப்பம் மற்றும் பணிச்சுமையால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்."ஆண்டுக்காண்டு அரசு விதிகளை காற்றில் பறக்கவிடும் தனியார் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்காதது, கல்வி வியாபாரத்தை ஊக்குவிப்பதாகவே அமைகிறது' என, கல்வி யாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதும், தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து காட்டுவதுமே, வெற்றி என்ற மாயயை தனியார் பள்ளிகள் மக்களிடையே பரப்பிவிட்டன. அதுபோன்ற பள்ளிகளுக்கே, பொதுமக்களும் சேர்க்கைக்கு கட்டணத்தை பற்றி கவலைப்படாமல் படையெடுப்பதால், அனைத்து பள்ளிகளும் அதையே பின்பற்ற துவங்கிவிட்டன.

கல்வியின் மூலம் அனுபவத்தை கற்றுக் கொள்வதற்கு பதில், மனப்பாடம் செய்ய வைக்கும், இயந்திரமாக குழந்தைகளை மாற்றிவிடுகின்றனர்.இதனால், கல்வியாண்டின் நடுவில், புத்தகம் கிடைக்காமல் தவிப்பது, விதிமுறைகளின்படி செயல்படும் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள், இவர்களோடு போட்டி போட முடியாமல் தவிப்பது போன்ற பாதிப்புகள் உருவாகின்றன.இவற்றையெல்லாம் தெரிந்தும்,ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளின் விதிமீறலை அனுமதித்து வரும் அரசின் போக்கு, கல்வியை வியாபாரமயமாக்குவதற்கு உதவி செய்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.